கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் உடல்

கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் உடல்
X
கரூர் அருகே இன்று காலை ரயில் தண்டவாளத்தில் வாலிபர் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார் அவர் அருகில் கிடந்த ஆதார் அட்டை வைத்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகிறனர்.

கரூர் - திருச்சி இடையேயான ரயில் பாதையில் மாயனூருக்கும் மகாதானபுரத்துக்கும் இடையே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார்.

இதைக்கண்ட அந்த வழியே பணியில் சென்ற ரயில்வே ஊழியர் இதுபற்றிய கரூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். கரூர் ரயில்வே போலீஸ் சப்-&இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு கிடந்த ஆதார் அட்டையில் திருநாவுக்கரசு ராமலிங்கம், அண்ணாநகர், நீலாம்பூர், கோயம்புத்தூர் என்று இருந்தது. இதுபற்றி கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் சப்- - இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்