வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்

வீட்டுக்குள் புகுந்த பாம்பை  பிடித்த தீயணைப்புத் துறையினர்
X

வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பை லாவகமாக பிடிக்கும் தீயணைப்பு வீரர்.

குளித்தலையில் வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியார் நகர் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார், இன்று வீட்டில் இருந்த பொழுது வீட்டின் உட்பகுதியில் ஏழு அடி நீளமுள்ள சாரப்பாம்பு சென்றுள்ளது, அருகில் உள்ளவர்கள் அடிப்பதற்காக முயற்சித்த பொழுது சாரப்பாம்பு வீட்டின் உட்பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் அருகிலுள்ள பொந்தில் நுழைந்து கொண்டது.

இது குறித்து முசிறி தீயணைப்பு துறையினருக்கு செல்வராஜ் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செல்வராஜ் வீட்டிற்கு சென்று செப்டிக் டேங்க் அருகில் பதுங்கியிருந்த இருந்த 7 அடி சாரப்பாம்பை லாவகமாக கொக்கி மூலம் பிடித்து, பின்பு சாக்கு மூட்டையில் கட்டி வனப்பகுதிக்கு விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா