6 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: ஒருவர் கைது; லாரி பறிமுதல்

6 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: ஒருவர் கைது; லாரி பறிமுதல்
X

6 டன் ரேசன் அரிசியுடன் பிடிபட்ட லாரி.

குளித்தலை பகுதியில் 6 டன் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கடத்த முயற்சித்த லாரியுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நல்லூர் பகுதியில ரேஷன் அரிசி பதுக்கி வைத்து லாரியில் கடத்துவதாக குளித்தலைகுற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நல்லூர் பகுதிக்கு போலீசார் சென்று விசாரித்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் 6 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை கைப்பற்றி, திருச்செங்கோடு குமாரபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த பழனிச்சாமியை பிடித்து தோகைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்,

தோகைமலை காவல் ஆய்வாளர் விவேகானந்தன் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்து, கடத்தல் அரிசிகள் எங்கு இருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்திய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!