கரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா 3.19 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4 கிலோ இலவச அரிசி அமைச்சர் வழங்கல்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு தலா 4 கிலோ அரிசி திமுக சார்பில் வழங்குத் திட்டத்தை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. தொடங்கி வைத்தார்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு தலா 4 கிலோ அரிசி திமுக சார்பில் வழங்குத் திட்டத்தை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. தொடங்கி வைத்தார்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினவிழா நேற்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், மின் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி மலர் தூவி மரியாதை செய்தார்.
வெள்ளியணையில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் உள்ள நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். இதையடுத்து கொரோனா ஊரடங்கு காலத்தில் கரூர் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், கரூர் மாவட்ட திமுக சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கோடாங்கிபட்டியில் தொடங்கி வைத்தார்.
அப்போது மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
கரூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 19 ஆயிரம் கார்டுகளுக்கு தலா 4 கிலோ இலவச அரிசி மாவட்ட திமுக சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்காக 1,280 டன் அரிசி வரவழைக்கப்பட்டு கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு அங்கிருந்து மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu