தடுப்பூசி முதல் தவணை 70 சதம் செலுத்தியதால் அடுத்த கொரோனா அலை பாதிப்பு இருக்காது
கரூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளி ஒருவரின் வீட்டுக்கு சென்று மருந்து பெட்டகத்தை வழங்குகிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன். உடன் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
கொரோனா தடுப்பூசி முதல் தவணை 70% பேருக்கு செலுத்தி இருந்தால் தமிழகத்தில் அடுத்த கொரோனா அலை வந்தாலும் ஆக்சிஜன் தேவை இருக்காது உயிரிழப்பு என்ற நிலைக்கும் செல்லும் வாய்ப்பும் இருக்காது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் கூறினார்.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் ஆய்வு மேற் கொண்டார். மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டத்திட் கீழ் நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று மருந்து பெட்டகங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,,
தமிழகத்தில் நேற்று வரை 5 கோடியே 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப பூசி செலுத்தப்பட டுள்ளது. தமிழகத்தில் முதல் தவணையை கொரோனா தடுப்பூசி 64 சதவீதம் பேருக்கு செநலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 22 சதவிகிதம் பேர் செலுத்தியுள்ளனர்.சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் கரூர் 2 ம் இடத்தை பெற்றுள்ளது.கடந்த 2 மாதத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ். 18,88,703 பேர் பயனடைந்துள்ளனர். 18 வயது குறைந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை அளவிலேயே உள்ளது பரிட்சார்த்த முறையில் இன்னும் செயல்படுத்தவில்லை அப்படியே வெளியே செயல்படுத்தப்பட்டால் தமிழகம் அதை முன்னெடுத்துச் செல்லும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது கண்காணிப்பு கேமராக்கள் இதுவரை அமைக்கப்படாத மருத்துவமனையில் உடனடியாக கேமிராக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்சமயம் ஒரு சதவீதத்துக்கும் கீழே உள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் தடுப்பூசி 70% பேருக்கு முதல் தவணை ஊசியைச் செலுத்திக் கொண்டால் கூட அடுத்த அலையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை நேற்று மாலை வரை 64 சதவீதம் பேருக்கு தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய முகாம் மூலம் ஒரு மூன்று சதவீதம் கூட இருக்கலாம் 70% தடுப்பு ஊசி செலுத்தி இருந்தால் தமிழகத்தில் அடுத்த கொரோனா அலை வந்தாலும் ஆக்சிஜன் தேவை இருக்காது உயிரிழப்பு என்ற நிலைக்கும் செல்லும் வாய்ப்பு இருக்காது. இந்தியாவிலேயே நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்கள்தான் இரண்டு தவணைத் தடுப்பூசியும் முதன்முதலில் செலுத்தி உள்ளனர் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu