3 வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

3 வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை
X
கரூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன், கரூரில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரவணனுக்கு பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை, கால் செயல் இழந்துள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சரவணனின் உறவினர்கள், சரவணனை தேடியபோது மருத்துவமனையில் சிகிச்சையில் இல்லை. அப்போதுதான் அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபர் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து உறவினர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!