தாய், சகோதரியை அரிவாளால் வெட்டிய மகன், குமரியில் பரபரப்பு

தாய், சகோதரியை அரிவாளால் வெட்டிய மகன், குமரியில் பரபரப்பு
X

குமரியில் சைக்கோ

குமரியில், தாய் சகோதரியை அரிவாளால் வெட்டி விட்டு தற்கொலைக்கு முயன்ற சைக்கோ மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் அலோசியஸ் பிரின்ஸ் ( 40 ), இவர் கருங்கல் அருகே சகாயநகர் பகுதியை சேர்ந்த மெர்லின் ஜினி (36) என்ற பெண்ணை திருமணம் செய்து இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் 7 வயதில் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஊருக்கு வந்து திரும்ப செல்ல முடியாமல் அந்த பகுதியில் ஆசாரி வேலை செய்து வநதுள்ளார்‌.

இந்நிலையில் சொந்தமாக பட்டறை அமைத்து ஆசாரி வேலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான இயந்திரங்கள் வாங்கவும் கடைகள் வாடகைக்கு எடுக்கவும் முயற்சி எடுத்து வந்துள்ளார்.

ஏற்கனவே தொழில் நஷ்டமாக போவதை உணர்ந்த மனைவி மற்றும் குடும்பத்தார் புதிதாக தொடங்கும் தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்ற நபர் தூக்கத்தில் திடீரென ஆக்ரோஷபட்டு மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கி உள்ளார்.

இந்த தாக்குதலில் தனது 4 வயது ஆண் குழந்தையை தூக்கி கீழே வீசி உள்ளார், இதில் குழந்தைக்கும் மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர்.

இந்த தகவல் மத்திக்கோடு பகுதியில் வசிக்கும் அலோசியஸ் பிரின்ஸின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டு தாயார் ஞானச்செல்வம் மற்றும் சகோதரி சர்ச்சில் ஆகியோர் வந்து ஆறுதல் கூறி சமாதானம் செய்து தூங்கவைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே மீண்டும் ஆக்ரோஷமடைந்த அலோசியஸ் பிரின்ஸ் வீட்டில் இருந்த டிவி, வாசிங்மெசின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து சேதப்படுத்தி கையில் கிடைத்த மண்வெட்டி கொண்டு வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை வெட்டி பிளந்துள்ளான்.

தொடர்ந்து இவர்களது வீட்டின் முன் இருந்த மனைவியின் தந்தையால் வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டின் நாலாபுறமும் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து அராஜகம் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் அவரது தாயாருக்கு சகோதரிக்கும் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது, தகவல் அறிந்த அவர்கள் இருவரும் பதறி அடித்து கொண்டு அங்கே வந்துள்ளனர் தாயார் மற்றும் சகோதரி வருவதை பார்த்த அலோசியஸ் பிரின்ஸ் வீட்டின் மொட்டைமாடிக்கு கையில் ஒரு பைபிளுடன் சென்ற சாந்தமாக நின்று கொண்டு தாயாரை மேலே வரும்படி அழைத்துள்ளான்.

தாயாரும் மகன்தானே என்று எண்ணி மேலே ஏறி சென்ற நேரம் பார்த்து தான் மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் தாயாரை சரமாரியாக வெட்டி உள்ளார், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சகோதரியும் மேலே சென்று காப்பாற்ற முயலும் போது அவரையும் பல இடங்களில் வெட்டி உள்ளார்.

இருவரும் வெட்டு காயங்களுடன் கீழே விழுந்து கிடக்க தனது கையையும் தன்னைத்தானே வெட்டி கொண்டு மொட்டை மாடியில் மூவருமாக விழுந்து கிடந்துள்ளனர். இது சம்பந்தாமக மெர்லின் ஜினி யின் தாயார் கருங்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி குளச்சல் மற்றும் கருங்கல் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுவிட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரில் தாயார் ஞானசெல்வத்தின் நிலை மிகவும் ஆபாத்தான நிலையில் உள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென மனநலம் பாதித்து தாய் சகோதரி ஆகியோரை வெட்டுகத்தியால் வெட்டி தானும் தன்னைத்தானே வெட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கருங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!