குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: தாழ்வான இடங்களில் வெள்ளம்

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: தாழ்வான இடங்களில் வெள்ளம்
X

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். கடலில் சூறைக்காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகின்றது, ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.

மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையின் அளவை பொருத்து அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படும் என்ற நிலையில், ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!