மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல், பைபர் படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் திண்டாட்டம்

மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல், பைபர் படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் திண்டாட்டம்
X

பைல் படம்

மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல் மேடால் பைபர் படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் திண்டாடுகின்றனர்.

குமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் ஆனி, ஆடி மாதங்களில் பெரும்பாலும் கடற்சீற்றம் அதிகமாக காணப்படும், இதனால் கடலில் எழும்பும் ராட்சத அலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்து வந்தன.

இதே போன்று தேங்காய்பட்டிணம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி துறைமுகம் மீனவர்களின் கருத்தை கேட்காமல் அமைக்கபட்டதல் ஆனி, ஆடி மாதங்களில் ஏற்படும் கடற்சீற்றத்தில் முகத்துவாரம் பகுதியில் மணற்மேடுகள் குவிந்து வருகிறது.

மேலும் அலைகள் அதிக அளவில் மேல் நோக்கி எழும்புவதால் துறைமுகத்தில் இருந்து படகுகள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது, இதனால் கடந்த ஒரு வருடத்தில் படகுகள் கவிழ்ந்து 5 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்தனர்.

இதனை தொடர்ந்து மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று முகத்துவார பகுதியில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற மணல் அள்ளும் எந்திரம் கொண்டு வந்து மாற்றப்பட்டது.

தற்போது துறைமுக முகத்துவாரம் இடிந்தும் தடுப்புக்கு வைக்கப்பட்டிருந்த கற்கள் அனைத்தும் முகத்துவாரத்தில் குவிந்து கிடப்பதால் மீண்டும் படகுகள் கடலுக்குள் சென்று வர முடியாத நிலை இருந்து வருகிறது.

இதனால் கடந்த 10 நாட்களாக அன்றாடம் மீன்பிடிக்க செல்லும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருத்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது,

மேற்கு கடற்கரை பகுதிகளில் கடைபிடிக்கபட்டு வரும் மீன்பிடி தடைக்காலம் இன்னும் 15 நாட்களில் முடிவடையும் நிலையில் அதற்குள் துறைமுக முகத்துவாரத்தில் குவிந்து கிடக்கும் மணல் பாறைகளை அகற்றாமல் இருந்தால் படகுகள் கடலுக்குள் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முகத்துவாரத்தில் தேங்கி கிடக்கும் மணல்மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்