பட்ட பகலில் 10 பவுன் நகை கொள்ளை: சிசிடிவி-யில் மாட்டிய குற்றவாளி
சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நபர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் நேற்று பகல் நேரத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட், நீல நிற சட்டை, தொப்பி, தோளில் பேகுடன் ஆலயத்திற்குள் தொழுவது போல் வந்து அங்கு மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை உடைத்துள்ளார்.
மேலும் மாதா சொரூபத்தில் இருந்த 5 பவன் தங்க சங்கிலியையும், அதேபோன்று அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் சொருபத்தில் இருந்த மற்றுமொரு 5 பவன் தங்க சங்கிலியை திருடிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வெளியே இறங்கி செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தன.
ஆலயத்தினுள் ஏதோ உடைந்தது போன்ற சத்தம் கேட்டு வெளியே இருந்தவர்கள் வந்து பார்த்தபோது சொரூப கூடாரங்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்தேறிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu