மழையால் குழாய் துண்டிப்பு - லாரி மூலம் சப்ளை செய்த மாநகராட்சி

மழையால் குழாய் துண்டிப்பு - லாரி மூலம் சப்ளை செய்த மாநகராட்சி
X

கோப்பு படம்

மழையால் குழாய் துண்டிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊட்டுவாழ்மடம், பாரைக்கால்மடம், கருப்புகோட்டை, சக்தி கார்டன், பெருவிளை, பள்ளவிலை, புளியடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்தது. இந்த கனமழையால் வெள்ளம் புகுந்ததில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதை பொதுமக்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மாநகராட்சி லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய ஆணையர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி லாரிகள் மூலம் அனைவருக்கும் தேவையான குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி