கன்னியாகுமரியில் மோட்டர் சைக்கிள்களை திருடியவர் கைது

கன்னியாகுமரியில் மோட்டர் சைக்கிள்களை திருடியவர் கைது
X
குமரியில், இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (32), இவர் தனது மோட்டார் சைக்கிளை, கோட்டார் ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதேபோல், வடிவீஸ்வரம் பகுதியை விக்னேஷ் என்பவரும் கோட்டார் ரயில் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாகர்கோவிலுக்கு திரும்பிய இருவரும் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர், அதன் அடிப்படையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடியது பரைக்கோடு பகுதியை சேர்ந்த மெர்பின்தாஸ் (19) என்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். குற்றவாளியை விரைவாக கண்டுபிடித்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story
why is ai important to the future