திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் புகுந்த காற்றாற்று வெள்ளம்

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் புகுந்த காற்றாற்று வெள்ளம்
X

 திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ளம். 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான குமரி திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் காற்றாற்று வெள்ளம் புகுந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி தற்போது வரை பெய்து வருகிறது. மழை நீடித்து வருவதால், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி அணைகளில் இருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளமாக உருமாறி உள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் 108 திவ்ய தேச கோவில்களில் ஒன்றான திகழும், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் அருகில் அமைந்துள்ள குளம் காட்டாற்று காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் கோவில் வளாகம், மூலஸ்தானம், பரிவார மூர்த்திகள் கோவில்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இடுப்பளவு இருக்கும் மழை வெள்ளம் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு, அந்த தடை விலகிய நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், கோவில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!