குமரி அருகே ஊருக்குள் புகுந்த கடல்நீர் - மணல் மூட்டை அடுக்கி வீடுகளை பாதுகாத்த மக்கள்

குமரி அருகே ஊருக்குள் புகுந்த கடல்நீர் - மணல் மூட்டை அடுக்கி வீடுகளை பாதுகாத்த மக்கள்
X

குமரி மாவட்டம் அழிக்கால் கடலோர கிராமத்தில், சீற்றம் காரணமாக ஊருக்குள் புகுந்த கடல் நீர்.

கன்னியாகுமரி அருகே, ஊருக்குள் புகுந்த கடல் நீரால் அவதியுற்ற பொதுமக்கள், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, வீடுகளை பாதுகாத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் கடலோர கிராமத்தில் இன்று திடீரென கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால், கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் இத்தகைய சம்பவம் தொடரும் நிலையில், இன்று ஏற்பட்ட கடல் சீற்றததால், 15 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கடல் நீருடன் மணலும் வருவதால் வீடுகளில் மணல் தேங்கி அதை அப்புறப்படுத்த மக்கள் பெரு சிரமம் அடைந்தனர். வீடுகளில் தண்ணீர் வராமல் இருப்பதற்காக, தங்கள் வீட்டு வாசலில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து பாதுகாத்துக் கொண்டனர்.

இனி வரும் நாட்களிலும் கடல் சீற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வீடுகளில் தங்கவும் முடியாமல் பொருட்களை எடுத்து செல்ல மனமின்றி, மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா