குமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்தில் மாற்றம்
இரவு நேர ஊரடங்கு எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது போக்குவரத்தில் பல்வேறு மாறுதல்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணிதோட்டம், செட்டிகுளம், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், குளச்சல், குழித்துறை, திங்கள்சந்தை உள்ளிட்ட 12 டெப்போக்களிலும் இருந்து சுமார் 770 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதில் 444 டவுன் பஸ்களும், 336 புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அரசு அறிவித்தபடி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.மேலும் நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து களியக்காவிளை மற்றும் திருநெல்வேலிக்கு இரவு 8 மணிக்கும், மதுரைக்கு 5 மணிக்கும் திருச்செந்தூருக்கு 6 மணிக்கும் கடைசி பேருந்து இயக்கப்படுகிறது.
அதேபோல் மாவட்டத்திற்குள்ளே இயக்கப்படும் டவுண்பஸ்களும் இரவு 10 மணிக்குள் டெப்போவுக்குள் கொண்டுவரும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தவிர தேனி, கம்பம், பெரியகுளம், திருப்பூர் போன்ற வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயண நேரம் குறைந்தபட்சம் 10 மணி நேரமாக இருப்பதால் அவையும் காலை வேளையில் துவக்கப்பட்டு இரவு சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் விரைவு பஸ்களும் காலை நேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu