ஆர்.டி.ஓ. ஆபிசில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.1.20 லட்சம் பறிமுதல்

ஆர்.டி.ஓ. ஆபிசில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.1.20 லட்சம் பறிமுதல்
X
குமரியில், ஆர்.டி. ஓ அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ. 1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான போலீசார், நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அலுவலகத்தில் தேவையின்றி நின்றுகொண்டு இருந்த புரோக்கர்கள், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை கண்டதும் வெளியேற முயன்ற நிலையில், அவர்களை தடுத்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ,அவர்களிடமும் அதிகாரிகளிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களையும், வாகனங்களையும் சோதனை செய்தனர், இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது, மேலும் சோதனை முடிந்த பின்னரே லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.

களியக்காவிளை மற்றும் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!