/* */

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்

கன்னியாகுமரியில், காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயமான குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்
X

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில், குழந்தைகள் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது, இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தாய் அல்லது தந்தை இல்லாத ஆதரவற்ற, 10 க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், பள்ளியாடி தனியார் பள்ளிக்கு பயில சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் இருவரும், பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவரும் சேர்ந்து பள்ளியில் இருந்து மாலை காப்பகத்திற்கு வந்த பின்னர், திடீரென மாயமாகினர். அவர்களை அருகில் உள்ள பகுதிகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், காப்பக நிர்வாகி பியூட்சன் ஹெர்பர்ட் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. வெள்ளிகோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சக மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் மாணவிகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, காவல்துறை அதிகாரிகள் கூறினர். காப்பகத்தில் இருந்து மூன்று பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது