மரம் முறிந்து விழுந்து மினி லாரி சேதம்: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

மரம் முறிந்து விழுந்து மினி லாரி சேதம்: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
X

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில், மரம் லாரியின் மேல் சாய்ந்து விழுந்தது.

குமரியில் மரம் முறிந்து விழுந்து மினி லாரி சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு பலசரக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த மினி லாரி, குமரி மாவட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே வந்த போது , எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரம் ஒன்று, லாரியின் மேல் சாய்ந்து விழுந்தது.

இது குறித்து தகவலறிந்த நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனை தொடர்ந்து மினி லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், லாரியின் மேல் பகுதியில் மட்டும் லேசான சேதம் ஏற்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture