மனைவியை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் தீக்குளிக்க முயற்சி

மனைவியை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் தீக்குளிக்க முயற்சி
X

மனைவியை சேர்த்து வைக்க கோரி, குமரி கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற கவணவன்.

குமரியில் மனைவியை சேர்த்து வைக்க கோரி, கணவன், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீபா, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த மார்ஷல் ரோமன் வயது (40), என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மார்ஷல் ரோமன் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்து பிரதீபாவிடம் குடி போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் கணவரை பிரிந்து சுசீந்திரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் பிரதீபாவிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட மார்ஷல் ரோமன் நேற்று இரவும் குடிபோதையில் பிரதீபா வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.

அப்போது தன்னுடன் வருமாறு பிரதீபாவை அழைத்து உள்ளார், இதற்கு பிரதீபா சம்மதிக்காததால் இன்று அவர் பணிபுரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மார்ஷல் ரோமன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே பிரதீபா வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!