நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நாளை 6 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நாளை 6 இடங்களில்  சிறப்பு தடுப்பூசி முகாம்கள்
X
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நாளை (24/06/2021) 6 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை ஐந்து இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி கவிமணி மேல்நிலை பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்துக்கல்லூரி, மற்றும் சிஎம்சி பள்ளி ஆகிய 4 மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ஒவ்வொரு முகாமிலும் 280 கோவிசீல்டு ( COVISHIELD ) முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

இதே போன்று SMRV மேல்நிலை பள்ளியில் 450 டோஸ் கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும், பறக்கை பகுதியில் மைந்துள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 150 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

அனைத்து மையங்களிலும் காலை 9:30 மணிக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் 10:30 மணிக்கு தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

டோக்கன் பெற்றவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால் பொதுமக்கள் காலை உணவை சாப்பிட்ட பிறகு அல்லது உணவை எடுத்துக்கொண்டு தடுப்பூசி முகாம்களுக்கு வர வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!