குமரியில் நிச்சயம் தொழில்நுட்ப பூங்கா வரும்: அமைச்சர் மனோ தங்கராஜ்
மார்த்தாண்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோதங்கராஜ்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து, குமரி மகாசபா அமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம், மார்த்தாண்டம் அருகே இலவுவிளை மார் எப்ரோம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழக தகவல் தொழில்துட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், இதில் கலந்து கொண்டு முக்கியமான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் முக்கிய வளர்ச்சிகளில் ஒன்றான விமான நிலையம் அமைப்பது குறித்து ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து மத்திய அரசிற்கு கருத்துகள் அனுப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும்.
முதல்வரின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் குமரியில் சரியான இடம் தேர்வுசெய்தவுடன் தொழில்நுட்ப பூங்கா நிச்சயமாக அமைக்கபடும். நான்குவழி சாலைப்பணிகளில் 23லட்சம் மெட்ரிக் டன் மண் தேவைபடுவதால் அந்த பணிகளில் மந்தம் ஏற்பட்டுள்ளது, மத்திய அரசின் இன்டர்ஸ்டேட் டிரேன்ஸ்போர்டேஷன் சட்டத்தினால் கேரளாவிற்கு கனிமவளங்களை கொண்டு செல்வதை தடுக்கமுடியாது. கேரளாவிற்கு அதிகளவில் கனிமவளங்கள் எடுத்து செல்வதை கண்காணித்து கட்டுப்பாடுகள் விதிக்கபடும்.
குமரி ஆலயங்களில் குடமுழுக்கு உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் ஆன்மீக சுற்றுலா குறித்து திட்டமிடப்படும். கேரளாவை போல் குமரி மாவட்டத்தில் ரப்பருக்கு குறைந்தபட்சவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பஞ்சாயத்துகளிலும் விளையாட்டுத்திடல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu