எடிஎம் பணம் கொள்ளை: சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை

எடிஎம் பணம் கொள்ளை:  சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை
X

பணம் கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம்.

குமரியில், வங்கி ஏடிஎம் பணம் கொள்ளை தொடர்பாக, சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே, தூத்தூர் கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இப்பகுதியில், திருச்சூரை தலைமையிடமாக கொண்ட ஈசாப் என்ற தனியார் வங்கி, அதன் ஏடிஎம் உள்ளது. நேற்று மாலையில், ஏ.டி.எம். இல் சுமார் 7 லட்சம் ருபாய் பணம் நிரப்பப்பட்டுள்ளது.

இன்று காலையில் வங்கியை திறக்க அலுவலர்கள் வந்தபோது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில், நித்திரவிளை போலீசார் விரைந்து வந்து, ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறையினுள் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

திருட்டில் ஈடுபட்டுள்ள நபர்கள், கேஸ் வெல்டிங் மூலமாக இயந்திரத்தை உடைத்து தான் பணத்தை திருடி சென்றுள்ளனர் என்று முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. எனவே, இதையே தொழிலாக கொண்டவர்கள்தான், திருட்டை செய்திருக்க கூடும் என்றும் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடக்கிறது.

Tags

Next Story
பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல் தொடக்கம் !