குமரியில் 510 இடங்களில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம்

குமரியில் 510 இடங்களில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம்
X

வல்லங்குமரவிளை அரசு தொடக்கபள்ளியில், மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த். 

குமரியில் 3 ஆவது கட்டமாக 510 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணி அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது, அதன்படி கடந்த 2 முறை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

அவ்வகையில், தமிழகம் முழுவதும் மூன்றாவது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் 510 இடங்களில் கொரோனா தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது.

நாகர்கோவில் வல்லங்குமரவிளை அரசு தொடக்கபள்ளியில் மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த், இரண்டாவது முகாமின் போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது போல இன்று நடைபெறும் 3-வது முகாமில் தட்டுப்பாடு வராத அளவிற்கு ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு