கொரோனா அதிகரிப்பு - கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரிக்கை

கொரோனா அதிகரிப்பு - கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரிக்கை
X

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநில இணைச் செயலாளர் ஜீவா ஸ்டாலின் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மனுவில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 890 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை கவனிக்கும் பொறுப்பில் உள்ள செவிலியர்கள் ஒரு வார்டில் 50 பேர் இதர பகுதிகளுக்கு 40 பேர் என்ன ஒரு ஷிப்டுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக குவாரண்டைன் விடுமுறை கொடுக்க இயலாத நிலை உள்ளது, நோயாளிகளுக்கான படுக்கை வசதியை அதிகப்படுத்தும் சூழ்நிலையில் செவிலியர்கள் பற்றாக்குறை இன்னும் அதிகமாக ஏற்படும்.

எனவே நோயாளிகளின் நலன் கருத்தில் கொண்டு அவசர தேவைக்காக 100 செவிலியர்களையும், 25 மருத்துவப் பணியாளர்களையும் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
future of ai in retail