7 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு - இருளில் தவிக்கும் பொதுமக்கள்

7 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு - இருளில் தவிக்கும் பொதுமக்கள்
X

கோப்பு படம்

குமரியில் மழை நீர் வடியாததால் 7 கிராமங்களை சேர்ந்த மக்கள், மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்து வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு 72 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மிக கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து உள்ளது. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் தொடர்ந்த கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியதால் அணைகளில் இருந்து வினாடிக்கு 47 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், மழை நின்று 48 மணி நேரம் கடந்தாலும் அணைகளில் இருந்து தற்போதும் வினாடிக்கு 8000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், தாழ்வான பகுதிகளான முஞ்சிறை, பருத்திகடவு உட்பட 7 கிராமங்களை முற்றிலுமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் கிராமங்களில் உள்ள மின்மாற்றிகள் மின்கம்பங்களை மழைநீர் சூழ்ந்து இருப்பதன் காரணமாகவும், பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்து இருப்பதாலும் இன்று 6 ஆவது நாளாக மின்சார விநியோகம் தடைபட்டு உள்ளது. இதன் காரணமாக சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருளில் தத்தளித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future