குமரி மேற்கு பகுதியில் மீன்பிடி தடைக்காலம். தொடங்குகிறது
மீன்பிடி தடை காலம் தொடங்குவதால் விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம் தொடங்குவதால் விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு 21 நாட்கள் தடை விதித்துள்ளது, அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் இரண்டு கட்டமாக நடைபெறும்.
கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி ராஜாக்கமங்களம், முட்டம், குளச்சல் தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி காலனி போன்ற பகுதிகளில் மே 31 முதல் ஜூலை 31 வரையும் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் ஏற்கனவே கடந்த மாதம் ஏப்ரல் 15ம் தேதியுடன் தொடங்கி தற்போது அமலில் இருக்கும் நிலையில் மேற்கு கடற்கரை பகுதிகளில் நாளை நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே ஊரடங்கு காரணமாக மீன் பிடிப்பதற்கும் வியாபாரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் கடந்த 2 வாரமாக கடலுக்கு செல்லவில்லை மேலும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட யாஸ் புயல் எச்சரிக்கையால் மேற்கு கடலோர கிராமங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் பாதியிலேயே திரும்பி வந்தனர்.
இந்நிலையில் நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம் தொடங்குவதால் குமரி மேற்கு கடற்கரையோர பகுதிகளில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu