கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு வளையத்தில் வாக்கு எண்ணும் மையங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு வளையத்தில் வாக்கு எண்ணும் மையங்கள்
X

வாக்கு எண்ணும் மையத்திற்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கன்னியா குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.

அதன்படி நடைபெற்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 8 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே இந்த வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் காவல்துறையின் பாதுகாப்பு வலையத்தினுள் கொண்டு வரப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 250 கண்காணிப்பு காமராக்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்