வயலக்காவூர்: காணாமல்போன பெண் சடலமாக கிணற்றில் இருந்து மீட்பு

வயலக்காவூர்: காணாமல்போன பெண் சடலமாக கிணற்றில் இருந்து மீட்பு
X

 வள்ளியம்மாள்

வயலக்காவூரில், காணாமல் போன பெண், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், வயலக்காவூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுரை. இவரது மனைவி வள்ளியம்மாள். கடந்த 18/11/21 அன்று இரவு சுமார் 10மணியளவில் வீட்டில் இருந்து வீட்டில் காணவில்லை. வள்ளியம்மாளை பல இடங்களில் அவரது உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இன்று காலை 6:30 மணிக்கு அவரது வீட்டிற்கு சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள நீர் செல்லும் மதகின் அருகில் உள்ள கிணற்றில் சடலம் காணப்பட்டது. அது வள்ளியம்மாள் என்று தெரிய வந்தது. இதுகுறித்து அவரது உறவினர்கள், மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்