வாலாஜாபாத் : விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத் துறை சோதனை

வாலாஜாபாத் : விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத் துறை சோதனை
X

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத்தில் முன்னாள் அமைசசர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது.

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் அவரது உதவியாளராக இருந்த வாலாஜாபாத் பாலாஜி நகரில் வசிக்கும் அஜய் குமார் என்பவர் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் காலை 7 மணிமுதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் வீட்டில் உள்ள கணினி மற்றும் ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!