உள்ளாவூர்‌ ஊராட்சியில் 3மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு துவங்கியது

உள்ளாவூர்‌ ஊராட்சியில் 3மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு துவங்கியது
X

உள்ளாவூர் ஊராட்சியில் மூன்று மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்கு பதிவு துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாவூர் ஊராட்சியில் 3 மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

இந்நிலையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உள்ள ஒரு கிராமத்தில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் லட்சுமி என்பவரின் பெயர் தனலட்சுமி என பெயரிடப்பட்டு வாக்குசாவடி நுழைவாயில் ஒட்டப்பட்டது. இதனால் காலை முதலே வாக்குப்பதிவு நடைபெறாமல் வேட்பாளரின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் வேட்பாளர் மற்றும் அவரது முகவர்களிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டு அந்த அச்சிடப்பட்ட போஸ்டரில் அப்புறப்படுத்தி புதிய போஸ்டர் திருத்தம் செய்யப்பட்டு ஒட்டப்பட்ட பின் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனால் மூன்று மணி மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!