வாலாஜாபாத் அருகே தேர் திருவிழாவிற்காக கிராம வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்
தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடைபெற உள்ள தேரோட்ட விழாவிற்காக கிராம வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு சந்தியம்மன் மற்றும் ஸ்ரீதான்தோன்றி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஊரில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால் தேர் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியில் கிராம ஊராட்சி ஈடுபட்டுள்ளது.
இதற்காக கிராம வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில் யாரும் முன் வராததால் கிராம ஊராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் சாலை அமைக்கும் பணி துவங்கும்.என ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தெரிவித்துள்ளர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu