உத்திரமேரூர் : ஒன்றிய பதவிகளில் மகுடம் சூடூம் மகாராணிகள்

உத்திரமேரூர் :  ஒன்றிய பதவிகளில் மகுடம் சூடூம் மகாராணிகள்
X

1.ஹேமலதா ஞானசேகரன்( இடது),  2. வசத்திகுமார் ( வலது).

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை இரு ஒன்றிய செயலாளர்களின் மனைவிகள் மகுடம் சூடவுள்ளனர்.

தமிழகத்தில் விடுபட்ட 9மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6மற்றும் 9ம் தேதிகளில் வாக்குபதிவு நடைபெற்று அதன் முடிவுகள் கடந்த 12ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் உத்திரமேரூர் ஊராட்சி ஓன்றியகுழு உறுப்பினர்களாக திமுக வை சேர்ந்த 19 உறுப்பினர்களும், அதிமுக சார்பாக 3 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் 9வார்டில் ஹேமலதா ஞானசேகரனும் மற்றும் 21வார்டில் வசந்திகுமாரும் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இவர்கள் இருவரும் உத்திரமேரூர் ஓன்றியத்தின் இரு பகுதிகளின் திமுக ஒன்றிய செயலாலர்களின் மனைவி ஆவார்கள்.

இந்நிலையில் ஹேமலதா ஞானசேகரன் ஒன்றியக்குழு தலைவராகவும் , வசத்திகுமார் ஓன்றியதுணை தலைவராகவும் தேர்தெடுக்கபடவுள்ளனர். நாளை முறைப்படி தேர்வு செய்யப்பட்டு உத்திரமேரூர் ஒன்றியத்தில் மகுடம் சூடவுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!