உத்திரமேரூர் தொகுதியை சேர்ந்த 59 நபர்களுக்கு இருளர் இன சான்றிதழ் வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் தொகுதியை சேர்ந்த 59 நபர்களுக்கு இருளர் இன சான்றிதழ் வழங்கப்பட்டது.
X

வாலாஜாபாத் , உத்திரமேரூர் பகுதியில் வசிக்கும் 59 இருளர் இன மக்களுக்கு இன சான்றிதழை சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் வழங்கினார்.

வாலாஜாபாத் , உத்திரமேரூர் பகுதியில் வசிக்கும் 59 இருளர் இன மக்களுக்கு இன சான்றிதழை சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் , உத்திரமேரூர் பகுதிகளில் வசித்து வரும் இருளர் இன மக்கள் நீண்ட காலமாக இன் சான்றிதழ் இன்றி பல்வேறு நல திட்டங்கள் பெறுதல் , குழந்தைகளின் கல்வி என பல வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதை தீர்க தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் வாலாஜாபாத் , உத்தரமேரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 59 இருளர் இன நபர்களுக்கு இன் சான்றிதழை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

மேலும் இரண்டு நபர்களுக்கு முதியோர் ஓய்வு தொகை வழங்கினார்.நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் ராஜலட்சுமி முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!