காஞ்சிபுரம் : பாலாற்றில் வெள்ளம் குறைந்த நிலையில் கரையில் ஒதுங்கும் சடலங்கள்
காஞ்சிபுரம் பாலாறு வெள்ளம்.( பைல் படம்)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 10 தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது.
இதுமட்டுமில்லாமல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பாலாற்றில் அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டதால் காஞ்சிபுரம் பாலாற்றில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கனஅடி நீர் சென்று பெரும் வெள்ளப்பெருக்கு ஆக மாறியது.
இந்நிலையில் பாலாற்றில் தவறி விழுந்த பெரும்பாகத்தை சேர்ந்த பச்சையப்பன் , சின்ன அய்யன்குளத்தை சேர்ந்த கருணாகரன் ஆகியோர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது வரை உடல் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது.
இன்று அங்கம்பாக்கம் பாலாற்று கரையோரம் உள்ள மரத்தில் அழுகிய நிலையில் ஒரு உடல் தொங்கி வருவதாக அப்பகுதியினர் காவல்துறைக்கு தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு மீட்பு துறை நிலைய அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ஜெகதீசன் தலைமையிலான குழுவினர் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை இயற்கை உபாதைக்கு சென்ற லட்சுமி என்ற பெண் நீரில் வழுக்கி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதன் பின் அவரது உடல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை காவல்துறை என பலர் எச்சரித்த நிலையில் இது போன்று நீர் குறைந்ததால் மக்கள் அதிக அளவில் ஆற்று பகுதிக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu