அரசு விழாவிற்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிய மாணவிகள்

அரசு விழாவிற்கு வந்து  ஏமாற்றுத்துடன் திரும்பிய மாணவிகள்
X

அரசு விழாவில் தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாட வந்த பள்ளி மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்தும் ஆசிரியருடன் விழாவிற்கு காத்திருந்த போது.

அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் பாட அருகில் இருந்த பள்ளியிலிருந்து மாணவிகள் வரவழைக்கப்பட்டு, மூன்று மணி நேரம் காத்திருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் , இன்று தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், புதுமைப்பெண் திட்ட துவக்க விழா மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு என இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த விச்சதாங்கல் பகுதியில் மாலை இரண்டு மணி அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என குறிப்பிட்டு அதற்கான ஏற்பாடுகள் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் சார்பில் செய்யப்பட்டது.

இந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாட அருகில் இருந்த பள்ளியிலிருந்து மாணவிகள் மதியம் 1:30 மணி அளவில் அழைத்து வரப்பட்டனர்.

விழா 3 மணி நேரம் தாமதமாக துவங்கிய நிலையில் விழாவிற்கு வந்த அமைச்சர் நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தினை திறந்து வைத்து மேடையில் நல திட்ட உதவிகளை வழங்கி சென்று விட்டார்.

இதனைக் கண்ட மாணவிகள் அனைவரும் பாட வந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பள்ளி மாணவிகளுக்காக பள்ளி நேரம் முடிந்தும் ஆசிரியர்கள் காத்திருந்த செயலை கண்ட பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் வருந்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!