மானாம்பதிக்கு 16 கிராம சுவாமிகள் வருகை.

உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தினை சுற்றியுள்ள 16 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் வருகை புரிந்து சிறப்பு தீப ஆராதனை நடைபெற்ற போது
உத்திரமேரூர் அடுத்த மானாமதி அருகே 16 கிராம சுவாமிகள் அணிவகுத்து நிற்க மாசி மக திருவிழா கோலாகலமாக அதிகாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மாசி மகத்தை கொண்டாடினர்.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல நூறு திருக்கோயில்கள் அமைந்துள்ளது இதில் திவ்ய தேசங்களும் பரிகார தளங்களும் கொண்ட பல்வேறு திருத்தலங்களில் நாள்தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மாசி மாசி மாதத்தில் பல்வேறு திருத்தலங்களில் பிரம்மோற்சவ விழாக்களும் மயான கொள்ளை மற்றும் மாசி மகத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
அவ்வகையில் , நகரேஷ சிறந்த பதியாம் காஞ்சியம்பதிக்கு தெற்கே வானவன் மாதேவிபுரம் என்னும் மானாம்பதியில் அருள்பாலித்து வரும் கி.பி.1020ஆம் ஆண்டு இராஜேந்திர சோழனால் சுட்டப்பட்ட அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வானசுந்தரேசுவரர் ஆலயத்தில் மாசி மகத் திருவிழா அதிகாலை சிறப்பாக நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகா திருமுழுக்கு காலை ஐந்து மணிக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒன்பது மணிக்கு அருள்மிகு மனோன்மணி அம்பாள் சமேத சந்திரசேகர சுவாமி திருவீதி உலா புறப்பாடு கிராம வீதிகளில் நடைபெற்றது.
மேலும் மானாம்பதி சுற்றியுள்ள 16 கிராமங்களிலும் இருந்தும் பல வண்ண மாலைகள் ஆபரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் சிறப்பு வாகனத்தில் அழைத்து வரப்பட்டு மானாம்பதி கூட்டு சாலையில் ஒரு சேர மாசி மகத்தன்று இணைவது வழக்கம்.
இன்று அதிகாலை நாலு மணி அளவில் மானாம்பதி கூட்டுச்சாலையில் அமைந்துள்ள திருவிழா மண்டபத்தில் அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வானசுந்தரேசுவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மானாம்பதி, பெருநகர் , மைசூர் தேத்துறை , தண்டரை உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் அணிவகுத்து நிற்க, சிறப்பு தீப ஆராதனை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விடிய விடிய மாசி மக திருவிழாவை காண அதிகாலை பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க 16 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வர பக்த கோடிகள் அனைவரும் சாமி தரிசனம் மேற்கொண்டு அருள் பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu