உத்திரமேரூர் அருகே நள்ளிரவில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை

உத்திரமேரூர் அருகே நள்ளிரவில் பிரபல ரவுடி  வெட்டி படுகொலை
X

பிரபல ரவுடி தமிழ்வேந்தன் ( பைல் படம்)

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியில் பிரபல ரவுடி தமிழ்வேந்தன் மர்ம நபர்களால் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காவித்தண்டலம் கிராமம் , எட்டியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தமிழ்வேந்தன்.

இவர் மீது மதுராந்தகம், சாலவாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தமிழ்வேந்தனை மர்ம நபர்கள் வயல் வெளிப் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். அவ்வழியாக சென்ற சிலர் இது குறித்து சாலவாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் . சுதாகர் நேரில் விசாரணை மேற்கொண்டு உடலை உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள இரு தனிப்படைகளை அமைத்தார்.

கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஏதேனும் தகராறா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!