வாலாஜாபாத் அருகே ரூ.6 கோடி மதிப்பிலான அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் அரசு குளம் புறம்போக்கு நிலத்தை வட்டாட்சியர் லோகநாதன் தலைமையில் மீட்டகப்பட்டது.
தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நீர்நிலை மற்றும் அரசு நில ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுத்து அது குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில் கடந்த ஆறு மாத காலமாகவே காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை இதுகுறித்த அறிக்கை சமர்ப்பித்து அதன் பேரில் பல கோடி மதிப்புள்ளான நிலங்களை தொடர்ச்சியாக மீட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் சுற்றுப்பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் குலம் புறம்போக்கு நிலம் இரண்டு ஏக்கர் தனிநபர் கல் மற்றும் இரும்பு வேலி அமைத்து ஆக்கிரமித்து வருவதாக கிராம நிர்வாக அலுவலர் A.சுரேஷ் வட்டாட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன் பேரில் நில அளவையர் சலீம் தலைமையிலான வருவாய் துறை குழு சர்வே எண் : 150 ல் நில அளவீடு செய்து குளம் புறம்போக்கு ஆக்கிரமிப்பை என்பதை உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் லோகநாதன் துணை வட்டாட்சியர் கோமளா தலைமையிலான வருவாய் துறை குழுவினர் இன்று காலை ஜேசிபி எந்திரத்துடன் நிலத்தினை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கல்தூண் மற்றும் இரும்பு வேலிகளை அகற்றி அரசு பயன்பாட்டிற்கு எடுத்து வந்தனர்.
ஆக்கிரமித்து வந்த நபரின் மேலாளர் இடம் மீண்டும் ஒருமுறை இது போன்ற தவறு நடைபெறக் கூடாது எனவும் எச்சரித்தனர்.
இதேபோல் இளையனார்வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளிமேடு பகுதியில் சர்வே எண் : 269,270,271 நீர்நிலை நிலங்களை ஆக்கிரமித்து பாண்டியன் என்பவர் கைது செய்து வருவதாக கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாசம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் உளுந்து பயிர் செய்து வந்த சுமார் 4 ஏக்கர் நிலத்தினை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்டு மீண்டும் அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
கடந்த முறை நெல் பயிரிட்டு இருந்தபோது இதே பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வந்த போது தற்போது அறுவடை காலம் என்பதால் இதனை முடித்துக் கொண்டு மேற்கொண்டு தவறு செய்யமாட்டேன் என கூறிய நிலையில் மீண்டும் ஆக்கிரமித்து பயிர் செய்ய முற்பட்டதால் வட்டாட்சியர் லோகநாதன் அவரை எச்சரித்து அடுத்த முறை தவறு செய்தால் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவுறுத்தினார்.
இந்த நில ஆக்கிரமிப்பில் வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், மாகரல் குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், காலூர் சங்கர் , களக்காட்டூர் டில்லிபாபு , கிராம உதவியாளர்கள் என பலர் இருந்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 6 கோடி என தெரிய வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu