வாலாஜாபாத் அருகே ஏரி ஆக்கிரமிப்பிலிருந்த ‌17.5 ஏக்கர்‌ நிலம் மீட்பு

வாலாஜாபாத் அருகே ஏரி ஆக்கிரமிப்பிலிருந்த ‌17.5 ஏக்கர்‌ நிலம் மீட்பு
X

கீழ்புதூர் ஏரியினை ஆக்கிரமித்து விவசாய பணிகள் மேற்கொண்ட இடத்தினை மீட்கும் வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான குழுவினர்.

வாலாஜாபாத் அடுத்த கீழ் புதூர் ஏரியினை‌ ஆக்கிரமித்து விவசாயம் மேற்கொண்ட 17.5 ஏக்கர் நிலத்தினை வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், ஆசூர் ஊராட்சிக்குபட்ட கீழ் புதூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பினவில் அமைந்துள்ளது.

இந்த ஏரியினை அப்பகுதி பொதுமக்கள் சுமார் 17.5 நிலத்தினை ஆக்கிரமித்து விவசாய பணிகள் மேற்கொண்டு வருவதாக வாலாஜாபாத் வட்டாட்சியருக்கு புகார் மனு பெறப்பட்டது.

மேலும் தமிழக அரசு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பினை மீட்க உத்தரவிட்டதன் பேரில் இன்று வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் மார்க்கண்டேயன் மற்றும் காஞ்சி தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் தலைமையிலான குழு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் இரண்டு ஜேசிபி இயந்திரங்களுடன் நிலவரப்புகளை உடைத்து சரி செய்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனர்.

இதனை தொடர்ந்து மேல்புதூர் கிராமத்தில் நீர் பிடிப்பு ஆக்கிரமிப்பு உள்ள 15 ஏக்கர் நிலத்தனையும் இக்குழு மீட்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பு அகற்றத்தை முன்னிட்டு காவல் நிலையத்தை சார்ந்த உதவி ஆய்வாளர் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு மீட்கப்பட்ட பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என எச்சரிக்கை பலகை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணி துறை சார்பில் வைக்கப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil