புதிய கல்குவாரி அளவை நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு: சாலை மறியல்.

புதிய கல்குவாரி அளவை நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு: சாலை மறியல்.
X

புதிய கல்குவாரி அறவை நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்.

சுற்றுசூழல் மற்றும் விவசாய பாதிப்புகளை தவிர்க வேண்டும் என பல இடங்களில் மனு அளித்தும் பயனில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது கடம்பர கோவிலில் புதிதாக கல்குவாரி அளவை நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது

இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியரிடமும் புதிய கல்குவாரி அளவை நிலையம் அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரியில் 300க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் .

இதனால் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா டிஎஸ்பி ஜூலியர் சீசர், காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் பாசில் பிரேம் ஆனந்த், மாகரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture