வருவாய் குறைவு காரணமாக தனியார் பேருந்து சேவை நிறுத்தம்

வருவாய் குறைவு காரணமாக தனியார் பேருந்து சேவை நிறுத்தம்
X

பல மணி நேரம் அரசு பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்.

வருவாய் குறைவு காரணமாக தனியார் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளது. அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் வழித்தடத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் , ஓரிக்கை, உத்திரமேரூர் ஆகிய மூன்று பணிமனைகளிலிருந்து 6 பேரூந்துகளும் , மேலும் சில பேருந்துகள் பல சிற்றூர்களுக்கும் சேவை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா தாக்கத்தால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய திமுக அரசு நகரப் பேருந்துகள் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தது.

இந்த வழித்தடத்தில் ஏழுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்கி வந்தது. மேற்கூறிய கொரோனா , மகளிர் இலவச பயணம் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் அதிகளவில் நாடுவதால் தனியார் பேருந்துகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது.

காஞ்சிபுரம் உத்தரமேரூர் வழித்தடம் சுமார் 35 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இதில் 10 கிலோ மீட்டர் தூரம் ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிச் சென்று விடுவதால்,

மீதியுள்ள 25 கிலோமீட்டர் தூரங்கள் குறைந்த பயணிகள் பயணம் செய்ததால் பெரும் அளவில் பேருந்து உரிமையாளர்கள் நஷ்டம் ஏற்படுவதால் பேருந்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு சில பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது.

இதனால் பொதுமக்கள் பேருந்துக்காக குறைந்தபட்சம் 40 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் காத்துக் கிடக்கும் சூழ்நிலை உள்ளது.

இதனை போக்க அரசு இந்த வழித்தடத்தில் கூடுதல் சர்வீஸ் அல்லது கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்