சாலவாக்கத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசு தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதோ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கவும் கூடாது எனவும் அதை மீறுபவர்கள் மீது கடுமையான அபராதத்துடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிளாஸ்டிக் இல்லாத காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குவோம் என வணிகர் மற்றும் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்தார் .
இந்நிலையில், அனைத்து கிராம ஊராட்சிகளும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அவ்வகையில் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இன்று காலை சாலவாக்கம் பகுதியில் அமைந்துள்ள அனைத்து வணிக கடைகளுக்கு நேரில் சென்று பிளாஸ்டிக் தவிர்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி உறுதிமொழி ஏற்றனர்.
இதேபோல் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் வட்டாரவளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும் துணைத்தலைவர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , தூய்மை பாரத ஓருங்கிணைப்பாளர், கிராம உதவியாளர்கள்உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியினை சாலவாக்கம் கிராம ஊராட்சி மன்ற செயலாளர் சக்திவேல் ஏற்பாடு செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu