/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யவேண்டும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யவேண்டும்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவேண்டும் என்று கோரி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 274 ஊராட்சிகள், ஒரு நகராட்சி , 5 பேரூராட்சிகள் அடங்கியுள்ளது. கிராமங்களுக்கு தேவையான குடிநீர் பாலாறு செய்யாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் போர்வெல் மூலம் அனைத்து பொதுமக்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இத்தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை முறையாக சுத்தம் செய்து குளோரின் மருந்துகளை கலந்து பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்பது வழக்கம்.

தற்போது பல ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் முறையாக சுத்தம் செய்யாமலும் குளோரின் மருந்து கலக்காமல் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்த நாட்கள் குறித்த தகவல்கள் ஏதம் எழுதப்படாமல் உள்ளது.

அடுத்து வரும் மாதங்களில் பருவ மழை காரணமாக பல்வேறு தாக்கங்கள் ஏற்படும் போது சுகாதாரமான குடிநீர் இல்லை என்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலையை உருவாக்கும் .

எனவே தற்போது இல் இருந்தே 15 நாட்களுக்கு ஒருமுறை தொட்டி சுத்தம் செய்து பொது மக்களுக்கு பாதுகாப்பான சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரி வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஆர்.வி. ரஞ்சித்குமார் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரினார்.

Updated On: 15 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க