15லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் - எம்எல்ஏ க.சுந்தர் திறந்து வைத்தார்.

15லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் - எம்எல்ஏ க.சுந்தர் திறந்து வைத்தார்.
X
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அப்பாவு நகர்ப்பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க.சுந்தர் தனது தொகுதி மேம்பாட்டு 2020- 2021 நிதியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்திற்கு ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். மாற்றுத்திறனாளிகள் வரும் வகையில் சாய்தளம் , குடிநீர், கழிவறை, குழந்தைகளை கவரும் ஓவியங்கள் என அனைத்தும் செய்யப்பட்டு பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் குத்துவிளக்கு ஏற்றி இன்று திறந்து வைத்தார். மேலும் அங்குள்ள குழந்தைகள் அங்கன்வாடி ஊழியர்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறந்த மையமாக செயல்பட வாழ்த்தினார். இதில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பெருநகராட்சி ஆணையர் லட்சுமி, நகர திமுக செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், சி.வி.எம். சேகர், ஒன்றிய செயலாளர்கள் பி.எம். குமார், கே.குமணன், தசரதன், ஜெகநாதன், மலர்மன்னன், தமிழ்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!