உத்திரமேரூரில் ரூ. 4.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உத்திரமேரூரில் ரூ. 4.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

உத்திரமேரூர் அடுத்த தோட்ட நாவல் கிராம ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் விழாவில்  இலவச வீட்டு மனை பட்டா பெற்ற பயனாளிகள்.

உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் பகுதியில் மனுநீதி முகாம் விழாவில் 333 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், தோட்டநாவல் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 333 பயனாளிகளுக்கு ரூ. 4,36,83,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கி பொது மக்களிடம் பேசியதாவது:

நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர்.

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.


இன்று மனுநீதி நாள் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, 24.02.2023 முதல் 07.03.2023 வரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் முகாமிட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. அதனை முறையாக பரிசீலித்து, பெறப்பட்ட மனுக்களில் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் மடக்கு சக்கர நாற்காலி 1 நபருக்கும், வருவாய்துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா 194 நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 17 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

புதிய குடும்ப அட்டை 25 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை மூலம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்-வீடுகள் வழங்குதல் 22 நபர்களுக்கும், பைப் லைன் அமைத்தல் பணி 1 நபருக்கும், மகளிர் சுய உதவிக்குழு வங்கிக் கடன்-4 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம் 2 நபர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் 4 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

தொழில்துறை மூலம் தொழில்கடன் 5 நபர்களுக்கும், வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் வேளாண் இடு பொருட்கள் 19 நபர்களுக்கும், வேளாண்மை-பொறியியல் துறை மூலம் பவர்ட்ரில்லர் 1 நபருக்கும், தோட்டக்கலைத்துறை மூலம் நாற்றுகள் மற்றும் விதைகள் 5 நபர்களுக்கும் கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு வணிகக் கடன், பயிர் கடன் 14 நபர்களுக்கும், தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நல வாரிய அடையாள அட்டை 9 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாமாக வீடுகட்டும் திட்டம்-10 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, உத்திரமேரூர் ஒன்றியக்குழுத் தலைவர் ஹேமலதா ஞானசேகர், உத்திரமேரூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் வசந்தி குமார், காஞ்சிபுரம் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!