உத்தரமேரூரில் சிசிடிவி அமைக்க வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் நன்கொடை

உத்தரமேரூரில் சிசிடிவி அமைக்க  வியாபாரிகள் சங்கம் சார்பில்   ரூ.1 லட்சம் நன்கொடை
X

சிசிடிவி கேமரா அமைக்க காவல்துறையிடம் ரூ 1லட்சம் நன்கொடை அளிக்கும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்.

உத்தரமேரூர் பஜார் வீதியில் போக்குவரத்து மற்றும் குற்றங்களை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி அமைக்கும் காவல்துறை பணிக்கு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கபட்டது.

உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின், நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் உத்திரமேரூர் பஜார் வீதியில் போக்குவரத்து மற்றும் குற்றங்களை அதி நவீன திறன் கொண்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த சங்கத்தின் சார்பில், 1 லட்சம் ரூபாய் நண்கொடையாக வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 1 லட்சம் ரூபாயை சங்கத்தலைவர் செல்வகுமார் தலைமையில், செயலர் சேகர், கவுரவ தலைவர் விநாயகம் மற்றும் சங்க நிர்வாகிகள் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசனிடம் நேற்று வழங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்