முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அடித்து கொலையா, தீர்த்துக் கட்டியது யார்?

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அடித்து கொலையா, தீர்த்துக் கட்டியது யார்?
X
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது கொலையா, தீர்த்துக் கட்டியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவராகவும் தற்போது திமுக கிழக்கு ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் இருந்து தனது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் கல்குவாரி அருகே சாலையில் மர்மமான முறையில் இருந்து கிடப்பதாக அப்பகுதியாக வந்த சிலர் பார்த்தன் பேரில் சாலவாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சண்முகத்தை பரிசோதித்ததில் அவர் தலையில் அடிபட்ட காயம் ஒன்று இருந்துள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விசாரணையில் சந்தேகத்துக்கு இடமான சங்கர் , தினகரன் , திவ்யபாரதி, தமிழன் உள்ளிட்ட 6 பேரை அழைத்து வந்து சாலவாக்கம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் புதியதாக கல்குவாரி அமைய உள்ளதாகவும் அதற்காக இவர் உறுதுணையாக இருந்து வருவதால் பொதுமக்கள் இடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் இப்பகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி மனு அளித்தார் எனவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture