வடிகால் வசதியின்றி கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்: விவசாயிகள் வேதனை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் நீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் முழுவதும் 98 சதவீத நீர் ஏரிகள் நீர்நிலைகள் நிரம்பி விவசாயத்திற்கு பெரும் ஆதரவு அளித்தது.
இந்நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் துவங்க இருந்த நிலையில் ஏரி மதகிலிருந்து பாசன கால்வாய் வழியாக நீர் மிகுதியாக சென்று நிலங்கள் நீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது. போதிய வடிகால் இல்லாததால் விவசாயம் மேற்கொள்ள பெரும் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் ஆரம்ப விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறை காரணமாக வெளியில் தனிநபர் உரகிடங்கிலிருந்து அதிக விலைக்கு வாங்கும் நிலை உருவாகியுள்ளது. கிராம நீர் பாசன குழு இல்லாததால் பாசன கால்வாய், தனிநபர் கால்வாய் ஆக்கிரமிப்பு, மதகு சீரமைப்பில் ஊராட்சி மெத்தனம் என பல காரணங்களால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
ஏரி நிரம்பியும் போதிய வழிகாட்டுதல் இல்லாமையால் முப்போகம் பயிரிடும் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் இன்னும் துவங்கப்படாததால் வேதனையடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu