நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்.

நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்.
X
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் நெற்றியில் நாமம், கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அழிசூர் கிராமம். விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டு இக்கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவ்வூரில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இந்த ஆண்டு தற்போது வரை திறக்கப்படவில்லை. கடந்த ஒரு மாத காலமாக இக்கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்த நெல்லை வைத்து காத்திருந்தினர்.

இதுகுறித்து மண்டல மேலாளர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. விரைவில் திறக்ககோரி விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் , கையில் திருவோடு ஏந்தி கிராம ஊராட்சி அலுவலகத்தை பூட்ட போவதாக அறிவித்து அதன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

தகவலறிந்து வந்த காவல்துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலரை ஒருங்கிணைத்து விரைவில் இக் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story