காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும் தூக்கிட்டு தற்கொலை
X

காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து  கொலை செய்த தாய் தானும் தற்கொலை செய்து கொண்டவரின் வீட்டை உறவினர்கள் உடைத்து உள்ளே சென்றனர்.

காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் அடுத்த உள்ளாவூர் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி உமா. இவர்களுக்கு தீபிகா என்ற 6 வயது மகள் உள்ளார்.

இவர்கள் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டிற்குள் உள்ள தனி ரூம்களில் தனித்தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வசித்து வந்துள்ளனர்.முருகன் தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த உமா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை மூடிக்கொண்டு 6 வயது மகள் தீபிகாவிற்கு டீயில் எரும்பு பவுடர் கலந்து கொடுத்து இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் மூடியிருந்த கதவை உடைத்து தற்கொலை செய்து கொண்டிருந்த உமாவையும், அவரது குழந்தை தீபிகாவையும் சடலமாக மீட்டனர்.

இதையடுத்து இருவரையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!